Maasu Thavirpom Sandhadhi Kaappom

மாசு தவிர்ப்போம், சந்ததி காப்போம் 

இது கிராமப் பகுதிகளுக்கு அவசியம்.  எப்படியும் வீட்டிற்கு ஒரு படித்த பிள்ளையாவது  இருப்பார்கள். அவர்கள் மனது வைத்தால் நடைமுறைப் படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக அவர்களது மண்ணின் மீது அக்கறை இருக்கும்.  

வீட்டுக் குப்பைகளில் பாலிதீன் இல்லாமல் போனால் வீட்டுச் சுற்றுப்புறத்தோடு சேர்ந்து வயலும் மாசுபடாது.

பாலிதீன் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வழி, கடைகளில் பொருட்களை பாலிதீன் பைகளில் போட்டுத் தருகிறார்கள், பலரும் அப்படித்தான் கேட்டு வாங்குகிறார்கள்.

தயவுசெய்து துணிப்பைகளையே பயன்படுத்துங்கள்.

பாலிதீன் பைகளின் உபயோகம் குறைந்தால், பாதிக்கப்படப்போவது நிச்சயமாக விவசாயிகள் இல்லை.

ஒவ்வொருவரும் மரங்கள் வளர்ப்பதையும், மாசைக்குறைப்பதையும் பொழுதுபோக்காக வைத்துக்கொண்டால், நிச்சயம் பலன் இருக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்காவது இந்த எண்ணம் தோன்றினால் போதும், வீட்டிலுள்ள பெரியவர்களும், விவரம் புரியும் சிறு பிள்ளைகளும் பின்பற்றத் தொடங்குவார்கள்.

இதுவும் ஒரு தொற்றுவியாதிதான், ஒருவர் வீட்டுத் தோட்டத்தையும், தூய்மையையும் அதனால் கிடைக்கும் பயனையும் பார்த்தால் நிச்சயம் மற்றவருக்கும் செய்யத் தோன்றும்.

கடைக்குச் சென்றால் பாலிதீன் பைகளை வாங்காதீர்கள்.

கடை வைத்தால் பாலிதீன் பைகளை உபயோகிக்காதீர்கள்.

பாலிதீன் பைகள் மண்ணிற்கு கேடு.

காகிதப் பைகள் மரத்திற்கு கேடு.

No comments:

Post a Comment