Tamil Kalachaaram

தமிழ் கலாச்சாரம் 

தமிழ் என்றதும் நினைவில் வருவது அதன் எழுத்துக்கள் அல்ல, தமிழ் பேசும் மக்களின் உடை, உணவு, கலை, கலாசார சின்னங்கள், பண்பாடு போன்ற அத்தனை அடையாளங்களும்தான்.

அந்த உயர்ந்த தொன்மை மறைந்து போகக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகளின் தாய்மொழி அறிவு மிகவும் கவலைக்குரியது.

ஒரு குழந்தை வளரும்பொழுது நல்ல தமிழ் புத்தகங்களை படித்துக்காட்டி எளிமையாக விளக்கினால்அந்தக் குழந்தையுடன் சேர்த்து நல்ல எண்ணமும், நல்ல குணமும் வளரும்.
இந்தப் படிப்பு நமது பூர்வீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அழியாமல் காக்கும்.
தமிழர் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தது.
நமக்குத் தெரிந்த நம் முன்னோர் வாழ்க்கை நிகழ்வுகளை பிள்ளைகளுக்குச் சொல்லுவதன் மூலம் தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
நாம் பார்த்து வளர்ந்ததை அவர்கள் கேட்டாவது வளர்வார்கள்.
அப்படியேனும் அவர்களின் இயந்திர வாழ்க்கையில் கொஞ்சம் இயற்கையும் இடம் பிடிக்க உதவலாம்.

இயற்கையோடு இணைந்தது தமிழர் நாகரீகம்.

எந்த மொழிக்கும் இல்லாத பூர்வீகமும், சிறப்பும் தமிழ் மொழிக்கும், தமிழர்க்கும் உள்ளது. 

அழிந்து கொண்டிருக்கும் இயற்கையையும், கலைகளையும், வரலாற்று சின்னங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.

அது அனைவரின் கடமையும் ஆகும். 

No comments:

Post a Comment