Vaasippu Oru Varam

வாசிப்பு பற்றிய ஒரு வாசிப்பு:
தாய் மொழி படிக்க தெரிந்தால் போதுமே..
பல ஆயிரம் புத்தகங்கள் படிக்க கிடைக்கும்.
நீங்கள் வீட்டை நிர்வகிப்பவர்கள் என்றால்ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்க ஒதுக்குங்கள். அது உங்கள் மனதை நிர்வகிக்க உதவும்.
வேலைக்குச் செல்பவர்கள் பயணநேரம் மற்றும் ஓய்வு நேரத்தில் புத்தகத்தை துணையாக்கிக் கொள்ளலாம்.
படிக்க படிக்க சிந்தனை தெளிவாகும்.
எல்லா அனுபங்களையும் பட்டுத் தெரிந்துகொள்ள முடியாது.
ஆனால் படித்துத் தெளியலாம்.
சிறு வயதிலிருந்து வாசிக்கப் பழக வேண்டும்.

குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பை அளவின்றி அனுமதிக்கும் பெற்றோர் அனைவரும் சுயநலமானவர்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இரு காரணங்களைக் காணலாம். தாங்கள் தொலைக்காட்சி தொடர்களை தவறாமல் பார்ப்பதற்காகவும், குழந்தைகள் தங்களை தொந்திரவு செய்யாமல் இருப்பதற்காகவும்  இவ்வாறு கையாளப்படுகிறது.

தொலைகாட்சியையும், செல்போனையும் விலக்கி வைத்துவிட்டு நாமும் குழந்தைகளோடு அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம் அல்லது வாசிக்க சொல்லிக் கொடுக்கலாம். அப்படிச் செய்தால் நிச்சயம் குழந்தைகளுக்கு வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும், கண் குறைபாடுகளும் ஏற்படாது.
அறிவு விசாலமானால், உலகைப் பற்றிய பார்வை விசாலமாகும்.
வாசிப்பு ஒரு வரம், அதனால் உயரும் மனதின் தரம்.

No comments:

Post a Comment